#Breaking திருப்பூரில் பரிதாபம்; விடுதியில் கெட்டுப்போன உணவு உண்ட 3 சிறுவர்கள் உயிரிழப்பு!

திருப்பூர் அருகே விடுதியில் கெட்டுப்போன உணவு உண்ட 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் அவிநாசி சாலை பூண்டி ரிங்ரோட்டில் உள்ள விவேகானந்தா சேவாலயம் ஆதரவு எற்போர் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை உண்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது

இதனையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தைகள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், 3 சிறுவர்கள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

விருடுதியில் தங்கியுள்ள சிறுவர்களுக்கு கெட்டுப்போன உணவு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனைச் சாப்பிட்ட மாணவர்களில் 10 வயது முதல் 13 வயது வரையுள்ள 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கல் வெளியாகினது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது விடுதியில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், வெளிநபர்கள் யாரும் விடுதிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment