திருப்பூர் காப்பகம் மூடல் – அமைச்சர் கீதா ஜீவன் அதிரடி பேட்டி!!

நேற்றை தினத்தில் திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் செயல்பட்டு வரும் விவேகானந்தா சேவாலயம் என்ற தனியார் காப்பகத்தில் தங்கியிருந்த 14 குழந்தைகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனில்லாமல் 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சுருக்கு வலை விவகாரம்; போராட்டத்தில் குதித்த மீனவர்கள்!!!

இந்த சூழலில் தனியார் காப்பகத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், பாதுகாப்புத்துறை இயக்குனர் வளர்மதி நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் ஆதரவற்ற காப்பகம் முறையாக நடைப்பெறவில்லை என்று தெரிவித்தார். அதோடு காப்பகத்தில் இருக்கும் குழந்தைகள் ஈரோடு அரசு இல்லத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

உதவி செய்வது போல் மோசடி!! போண்டா மணியிடம் பணத்தை சுருட்டிய நபர் கைது!!

அதே போல் விவேகானந்தா சேவாலயம் காப்பக நிர்வாகி மீது சட்டப்படி குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment