சூரிய கிரகணம்… திருப்பதி கோவில் நடை 12 மணி நேரம் மூடப்படும்..!!

நாளை சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதியில் 12 மணி நேரம் கோயில் நடை சாத்தப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதனிடையே நாளை மாலை 5.11 மணி முதல் 6.27 வரையில் சூரிய கிரகணம் நடைப்பெறவுள்ளது. இதன் காரணமாக காலை 8.11 மணி முதல் இரவு 7.30 வரையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலுவடையும் சிட்ராங் புயல்! தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மழை?

கிட்டத்தட்ட சுமார் 12மணி நேரம் தேவஸ்தானம் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஏழுமலையானை பார்க்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அதே போல் பொது தரிசனம் தவிர்த்து அனைத்து தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும், நவம்பர் 8-ம் தேதி சந்திர கிரணம் நடைப்பெற இருப்பதால் அன்றைய தினத்தில் 12 மணி நேரம் கோயில் நடை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment