Connect with us

திருப்பதி பக்தர்களுக்கு குட் நியூஸ்!! என்ன தெரியுமா?

202203180808588619 Tamil News Tirupati Ezhumalayan arjitha seva tickets released on 20th SECVPF

செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு குட் நியூஸ்!! என்ன தெரியுமா?

இந்தியாவின் பணக்கார கோவில்களில் ஒன்றாக கருதப்படுவது திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் செப்டம்பர் மாதம் 27-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரையில் பிரம்மோற்சவ விழா கொண்டாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றைய தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக பக்தர்கள் இலவசமாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அக்டோபர் 1-ம்தேதி முதல் 5-ந்தேதி வரையில் ஆன்லைனில் ரூ.300 டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதனிடையே பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 26 நாட்களுக்கு 5 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், நேற்றைய தினத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ. 4.73 என தேவஸ்தானம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top