வரலாற்றில் முதன்முறை.. திருப்பதி ஏழுமலையானுக்கு அடித்த ஜாக்பாட்!!

இந்தியாவின் பணக்கார கோவில்களில் ஒன்றாக கருதப்படுவது திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் வரலாற்றின் முதல்முறையாக நேற்றைய தினத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 6 கோடி 18 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக இந்த காணிக்கை கோவில் வரலாற்றில் ஒரே நாளில் கிடைத்த அதிகபட்ச காணிக்கை என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ம் தேதி கிடைத்த 5 கோடி 75 லட்சம் ரூபாய் அதிகபட்ச உண்டியல் காணிக்கையாக இருந்தது.

இதனை முறியடிக்கும் வகையில் நேற்றைய தினத்தில் மட்டும் 75 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் 6 கோடி 18 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment