Connect with us

பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்த திருப்பதி தேவஸ்தானம்!

News

பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்த திருப்பதி தேவஸ்தானம்!

1e8bb52c05c1e129c203f60b10067d16

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக திருப்பதி கோவில் மூடப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் 300 ரூபாய் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது

ஆனால் அதே நேரத்தில் திருப்பதி தேவஸ்தானம் ஒரு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது அதன்படி திருப்பதிக்கு வரும் பக்தர்கள் www.tirupathibalaji.ap.gov.in  என்ற இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் மற்ற போலி இணையதளங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் திருப்பதி தேவஸ்தானம் எச்சரித்துள்ளது

மேலும் சில இடைத்தரகர்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என்றும் இடைத்தரகர்கள் சுவாமி தரிசனம் செய்ய உதவுவதாக பணத்தை பிடுங்க முயற்சிப்பார்கள் என்றும் அவர்களிடம் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் அறிவித்துள்ளது 

மேலும் அதிக பணம் வசூலித்து டிக்கெட் முன்பதிவு செய்யும் டிராவல் ஏஜென்சிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top