உடையும் நிலையில் திருப்பதி ஏரி: காளகஸ்தி உள்பட 80 கிராமங்களுக்கு ஆபத்து?

திருப்பதியில் உள்ள மிகப்பெரிய ஏரி உடையும் அபாயம் இருப்பதால் ஏரி அருகே உள்ள 80 கிராமங்கள் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் அதில் புகழ் பெற்ற காளகஸ்தியும் ஒன்று என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் அதனால் அங்கு உள்ள ஏரிகள் குளங்கள் நிரம்பி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத மழை திருப்பதியில் பெய்துள்ளதை அடுத்து திருப்பதியில் உள்ள மிகப்பெரிய ஏரி முழு கொள்ளளவை எட்டி உடையும் அபாயத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக காளகஸ்தி உள்பட 80 கிராமங்கள் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் இதனை தடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment