ஆன்லைனில் முன்பதிவு செய்த டிக்கெட் எத்தனை மாதங்களுக்கு செல்லும்: திருப்பதி தேவஸ்தானம் தகவல்

திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் தரிசனம் செய்ய வர முடியாத நிலை ஏற்பட்டால் அந்த டிக்கெட் எத்தனை நாட்களுக்கு செல்லும் என்பது குறித்து தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது

திருப்பதி மற்றும் திருமலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக திருப்பதி கோவிலை வெள்ளத்தில் சூழ்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கனமழை காரணமாக ஏற்கனவே ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்தவர்கள் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு தரிசனம் செய்ய முடியாதவர்கள் அதே டிக்கெட்டை ஆறுமாதங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது

ஆன்லைனில் 6 மாதங்களுக்குள் வேறு தேதியை மாற்றி தரிசனம் செய்ய தேவஸ்தான இணையதளத்தில் மாற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்படி ஏற்கனவே முன்பதிவு செய்த பக்தர்கள் தங்களது விருப்பத்திற்கு உரிய ஒரு தேதிக்கு மாற்றி டிக்கெட்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment