ஒரு முறை திருப்பதி சென்று வாங்க…உங்களுக்கு எவ்ளோ அதிர்ஷ்டம் அடிக்கப் போகுதுன்னு பாருங்க…

திருப்பதி வந்தா திருப்பம்னு ஒரு சினிமா பாடல் உண்டு. இது உண்மை தான்.

திருப்பதிக்கு செல்வதே பெரிய விஷயம். இதற்காக பலர் மெனக்கெட்டு சிறுக சிறுக சேமித்து ஆண்டுதோறும் செல்வதுண்டு. உண்மையில் அவர்கள் அனைவருக்குமே வாழ்வில் பெரிய திருப்பம் ஏற்படத்தான் செய்கிறது. இதை விஞ்ஞானமும் நிரூபிக்கிறது.

இது எப்படி என்றால், இந்தியாவில் சந்திரனின் தாக்கம் அதிகமாக உள்ள இடம் திருப்பதி. சந்திரன் சக்தி மிகுந்த கோவிலான திருப்பதிக்குச் சென்றதுமே மன நிம்மதி கிடைக்கிறது. எது இருந்தாலும் இல்லை என்றாலும் இது மட்டும் கண்டிப்பாக வேண்டும். சிலர் எவ்வளவு பணம் இருந்து என்ன பிரயோஜனம்? மன நிம்மதி இல்லையே என அங்கலாய்ப்பது உண்டு.

tirupathi2
tirupathi2

அதனால் திருப்பதி திருமலை சீனிவாச வெங்கடேசனை தரிசிக்கும் அன்பர்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள் தான். இங்கு ஸ்ரீராமானுஜர யந்திசக்கரங்கள் பதிந்துள்ளன. அதனால் அவற்றிலிருந்து வெளிவரும் சக்தி அளவிட முடியாதது.

கந்தபுராணத்திலும் இத்தலம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. திருப்பதியின் மேல் உள்ள பாபநாசம் தீர்த்தம் பாவங்களைப் போக்கும். செய்வினை தோஷம், வறுமை ஆகியவற்றை போக்கும். சந்ததியை விருத்தி அடையச் செய்யும்.

பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயக்குகிறது. அதனால் நமது மூளையும் பல மடங்கு வேகத்தில் செயல்படுகிறது. தொடர்ந்து நமக்கு தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது.

வாஸ்துப்படி வடகிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் தெற்கே உயரமான மலைகள் உள்ளன. வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்வதால் அந்த இடம் மிகவும் பிரபலமாகும் என்று சொல்வர். அதன்படி இவ்விடம் அமைந்துள்ளதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அந்த அருவி தான் பாபவிநாசம். நம் பாவங்கள் அத்தனையையும் நாசமாக்கி நமக்கு புண்ணியத்தை சேர்க்கும் இடம். அதனால் தான் பாபவிநாசமானது.

papavinasam
papavinasam

செல்வமும் அவர்களுக்கு மலை போல் குவிகிறது. உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள். அவர்கள் சந்திரனின் கதிர்களை அதிகளவில் ஈர்த்துக் கொள்கின்றனர். அதனால் தான் அறிவாற்றலிலும், நுண்ணறிவிலும் சிறந்து விளங்கி பொருளாதார வளர்ச்சி அடைகின்றனர்.

அதே போல் இந்தியாவிலும் சந்திரனின் தாக்கம் அதிகமுள்ள கோவில் இதுதான். மூலிகைகள் அதிகம் இங்கு இருப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. அது மட்டுமின்றி மகான்கள் நிறைந்த புனித பூமி என்பதால் எல்லோருக்கும் அவர்களின் அருளாசியும் கிட்டுகிறது.

வாஸ்துப்படி இந்தக் கோவில் ரொம்பவே பலமாக உள்ளது. அதனால் இந்தக் கோவில் மிக அதிக சக்தியுடையதாக உள்ளது.

இந்தியாவிலேயே அதிக செல்வச்செழிப்பான கோவிலும் இதுதான். இந்தக்கலிகாலத்திலும் பெருமாள் பக்தர்களுக்கு உதவி செய்கின்றனர். இந்தக் கோவிலின் தனிச்சிறப்பு ஒன்று உண்டு. அதாவது குலதெய்வம் இல்லாதவர்களும் தனக்கு எது என தெரியாதவர்களும் இந்தக் கோவிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்த மலையில் நடந்து நாம் ஏறினால் அக்குபங்சர் சிகிச்சைக்கு தன்னிச்சையாகவே நம் உடல் உட்படுத்தப்படுகிறது. இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. இந்த மலை மேல் நாம் எவ்வளவு நேரம் இருக்கிறோமோ அந்த அளவு பலன் கிடைக்கும். திங்கள் கிழமை செல்வது தனிச்சிறப்பு.

venkatesa
venkatesa

திருப்பதி போனாலே காத்துக்கிடக்கணும்பா…ஒரு ரூம்ல போட்டு அடைச்சிருவாங்க…10…18 மணி நேரம் உள்ள தான் கிடக்கணும்னு சொல்வாங்க. ஆனா அது நல்லதுக்குத் தான் என்பது தெரியாது. அந்த நேரத்தில் வெங்கடேச பெருமாளை மனதார நினைக்க வேண்டும். வேறு எந்த சிந்தனையும் வரக்கூடாது. இன்னொரு விஷயம் என்னன்னா அந்த மலையில் 11 மணி நேரம் இருக்க வேண்டும் என்பது ஐதீகம்.

இதுவரை போகாதவர்கள் ஒருமுறையாவது திருப்பதி சென்று வாங்க. அப்புறம் நீங்களே அடிக்கிற அதிர்ஷ்டத்தைப் பார்த்து வருஷா வருஷம் போக ஆரம்பிச்சிடுவீங்க.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews