திருநெல்வேலி ஸ்பெஷல் மாங்காய் சாம்பார்! இனி நம்ம வீட்டிலையும்.. மிஸ் பண்ணாதீங்க!

ஒவ்வொரு ஊருக்கு ஏற்ப விதவிதமான சாம்பார் ரெசிபி இருக்கும், நிறம் மனம் சுவை என பல மாற்றங்களும் இருக்கும், இப்போ திருநெல்வேலி ஸ்பெஷல் மாங்காய் சாம்பார் எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

மாங்காய் – 1 புளிப்பு இல்லாதது

துவரம்பருப்பு – 50 கிராம்

தக்காளி – 1

பெரிய வெங்காயம் – 1

சாம்பார் பொடி – 2 டீஸ்புன்

புளி – 1 நெல்லிக்காய் அளவு

வெல்லம் – 2 டீஸ்புன்

மிளகாய்த்தூள் – 1 டீஸ்புன்

மஞ்சள்தூள் – சிறிதளவு

வெந்தயம் – அரை டீஸ்புன்

கடுகு – அரை டீஸ்புன்

சீரகம் – அரை டீஸ்புன்

பெருங்காயத்தூள் – சிறிதளவு

சிகப்பு மிளகாய் – 1

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – சுவைக்கு ஏற்ப

நல்லெண்ணெய் – 1 மேஜைக்கரண்டி

கேரளா ஸ்டைல் தேங்காய் தால் ரெசிபி நம்ம வீட்டிலே செய்யலாமா!

செய்முறை :

துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும் அந்த நேரத்தில் புளியை கரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

மாங்காயை ஓரளவு பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெல்லத்தூள், வெந்தயம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, சிகப்பு மிளகாய் (கிள்ளியது) போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.

தக்காளி வதங்கியதும் அதில் சாம்பார் பொடி, மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டவும் பின்பு புளிக்கரைசல் ஊற்றி உப்பு சேர்க்கவும்.

புளிக்கரைசல் கொதித்து பச்சை வாசனை போனதும் வேக வைத்துள்ள துவரம்பருப்பு, மாங்காய் துண்டுகள் போட்டு மாங்காய் துண்டுகள் வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

இறுதியில் மல்லி தழை போட்டு இறக்கினால் சுவை கூடுதலாக இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews