திருநெல்வேலி ஸ்பெஷல் கோதுமை அல்வா ரெசிபி இதோ !

திருநெல்வேலி என்றாலோ நமக்கு அல்வா தான் நினைவுக்கு வரும். அந்த திருநெல்வேலி ஸ்பெஷல் கோதுமை அல்வா வீட்டில் எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்.:

சம்பா கோதுமை – ஒரு கப்,
சர்க்கரை – இரண்டரை கப்,
நெய் – அரை கப்,
ரிஃபைண்ட் ஆயில் அல்லது நெய் – கால் கப்,
எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன், ஏ
லக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்,
கேசரி பவுடர் – 2 சிட்டிகை,
முந்திரி, பதாம், பிஸ்தா துண்டுகளின் கலவை – ஒரு டேபிள்ஸ்பூன்,
வெள்ளரி விதை – ஒரு டீஸ்பூன்,
பாதாம் எசன்ஸ் (விருப்பப்பட்டால்) – சில சொட்டுகள்.

கிராமத்து ஸ்டைல் வத்தல் குழம்பு! எப்படி செய்யனு தெரியுமா?

செய்முறை.:

கோதுமையைக் கழுவி முதல் நாள் இரவே நீரில் ஊற வைக்கவும். மறுநாள் நீரை வடித்து, கிரைண்டர் அல்லது மிக்ஸியில் சேர்த்து சிறிது சிறிதாக நீர் விட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

இதை வெள்ளை துணியில் போட்டு நன்கு அழுத்தி பாலை வடிகட்டி எடுக்கவும்,மீண்டும் தண்ணீர் சேர்த்து அரைத்து பாலை வடிகட்டவும்.

இது போல் மூன்று நான்கு முறை பாலை வடித்து எடுத்து கொள்ளவும், இரண்டு மணி நேரம் தனியாக வைத்து கொள்ளவும்.

பாலின் மேலாக நீர் தெளிந்திருக்கும். இதை அசைக்காமல் பால் சிதறாமல் வடிகட்டவும். மீண்டும் அரை மணி நேரம் வைத்திருந்து, மேலே தெளியும் நீரை வடித்துவிடவும்.

முந்திரி, பதாம், பிஸ்தா துண்டுகளின் கலவையை சிறிதளவு நெய்யில் வறுத்தெடுக்கவும்.

எண்ணெய் – நெய்யைக் கலந்து கொள்ளவும்.

உலர்ந்த அத்திப்பழம் தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ !

நான்ஸ்டிக் கடாயில் சர்க்கரை, கோதுமைப்பால், ஒரு கரண்டி எண்ணெய் – நெய் கலவை சேர்த்துக் கிளறவும்.

கோதுமைப்பால் கெட்டியாக வரும்போது மீண்டும் எண்ணெய் – நெய் கலவை சேர்த்துக் கிளறவும்.

கோதுமைப் பால் கெட்டியாகி கடாயில் ஒட்டாமல் வரும்போது, சிறிதளவு தண்ணீரில் கரைத்த கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் பிரிந்து வரும் வரை வரை கிளறவும்.

முந்திரி, பதாம், பிஸ்தா, வெள்ளரி விதை, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறி, அல்வா கையில் ஒட்டாமல் உருண்டு வரும்போது அடுப்பை அணைக்கவும்.

விருப்பப்பட்டால் பாதாம் எசன்ஸ் கலக்கவும். நெய் தடவிய தட்டில் பரத்தி சுடச்சுடவோ ஆறிய பிறகு துண்டுகளாக்கியோ பரிமாறவும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment