இவர்களுக்கு எல்லாம் சிறப்பு தரிசனம் அனுமதி இல்லை: திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

சமூக வலைதளங்களில் ஒரு சிலருக்கு சிறப்பு தரிசனம் வழங்கப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளதாக வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக முதியோர்கள், குழந்தைகளுடன் வரும் பெற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு சிறப்பு தரிசன அனுமதி மறுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட கட்டுக்குள் வந்து விட்டதை அடுத்து மீண்டும் மேற்கண்டவர்களுக்கு சிறப்பு தரிசன டிக்கெட் வழங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. ஆனால் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

முதியவர்கள், குழந்தைகளுடன் பெற்றோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தரிசன அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை என்றும் சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்தியை நம்பி திருமலைக்கு வரவேண்டாம் என்றும் அறிவித்துள்ளனர்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print