திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்; பக்தர்களுக்கு காத்திருந்த அதிசயம்!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கடல் இன்று திடீரென உள்வாங்கியது சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களை பரபரப்பில் ஆழ்த்தியது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு டான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த திருக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்ல அது வெளி மாநிலங்கள் வெளிநாடுகள் இருந்து பக்தர்கள் அதிக அளவில் சுவாமி தரிசனம் செய்பவர்கள் வழக்கம். விடுமுறை தினமான சனிக்கிழமை இன்று அய்யா கோயில் நாழிக்கிணறு எதிரில் கடற்கரையில் கடல் நீர் சுமார் 50 அடி மேல் உள்வாங்கியது.

இதனால் திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பரபரப்பில் ஆழ்ந்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடலில் முக்கிய நாட்கள் ஆன அமாவாசை பௌர்ணமி அஷ்டமி நவமி ,நாட்களில் கடல் நீர் உள்வாங்குவது வழக்கம் இன்று கனத்த நாள் அல்லாத போதும் இன்று கடல் நீர் சுமார் 50 அடி மேல் உள்வாங்கியது.

இதனால்கடலில் பாறைகள் மற்றும் கோயிலில் உள்ள பழுதான சிலைகள் கடலில் போடுவது வழக்கம் கடல்நீர் உள்வாங்கியதால் அந்த சிலைகளும் வெளியே தென்பட்டன.

கடல் நீர் உள்வாங்கியதை பொறுப்படுத்தாமல் பக்தர்கள் பாறையின் மீது ஏறி புகைப்படம் எடுத்து அங்குள்ள சிப்பிகளை எடுத்தும் ஆனந்தமாக கடலில் குளித்து விளையாடினர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.