4 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்: அமைச்சர் அறிவிப்பு!

சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப் படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருவதால் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை. மேலும் மின்சாரம் ஒரு பல பகுதிகளில் தடைபட்டு உள்ளதால் இணையதளங்களும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்தும் காலம் செலுத்த கால அவகாசம் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார். எனினும் மற்ற மாவட்டங்களில் மின்சாரக் கட்டணங்கள் அதற்கு உரிய தேதியில் கட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment