ஆபாசமாக பேசிய டிக்டாக் சூர்யா, சிக்காவை குண்டர் சட்டத்தில் அடைக்க போலீஸ் நடவடிக்கை

திருப்பூரை சேர்ந்தவர் சுப்புலட்சுமி என்ற சூர்யா. இவர் டிக் டாக் மூலம் பிரபலமான இவர் அதன் மூலம் கிடைத்த புகழை வைத்து யூ டியூப் சேனல் தொடங்கினார்.

அதில் ஆபாசமாக யாரையாவது அர்ச்சித்து பேசுவதே இவருக்கு வேலை. இவருடன் சேர்ந்து இவரது காதலர் சிக்கா என்ற சிக்கந்தரும் தொடர்ந்து தங்களுக்கு எதிரானவர்களை பற்றி தவறாக பேசுவார்கள்.

அடிக்கடி இருவரும் பிரிந்து விட்டு ஒருவரை ஒருவர் தவறாக பேசியும் வீடியோ போடுவர் அவை யாவும் காதில் கேட்க முடியாத அளவு மோசமாக இருக்கும்.

இந்த சூழ்நிலையில் சமீபத்தில் சூர்யாவை விட்டு சிக்கா பிரிந்து தனது சொந்த ஊரான மதுரை ஜெய்ஹிந்த்புரம் சென்றார்.

அங்கு சென்றாலும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு வீடியோ போட்டு வந்தனர். மேலும் சூர்யா தனக்கு பிடிக்காத இன்னொரு யூ டியூப் சேனலை சேர்ந்தவரையும் படு ஆபாசமாக பேசி வந்தார்.

சென்னை கமிஷனர் அலுவலகம் முதல் பல இடங்களில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பல சமூக ஆர்வலர்கள் மனு கொடுத்து வந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்படாத  நிலையில் கோவையை சேர்ந்த ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரையில் இருந்த சிக்கா மற்றும்ன் சூர்யாவை கோவை போலீசார் நேற்று முன் தினம் கைது செய்தனர்.

இவர்கள் மீது உள்ள பழைய வழக்குகளை தூசி தட்டி எடுத்து பல்வேறு வழக்குகள் இவர்கள் மீது இருப்பதால் இவர்களை குண்டர் சட்டத்தில் ஜெயிலில் தள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment