டிக் டாக் வீடியோக்கள் குறித்து ஆவேசமடைந்த பேரரசு

பெண் விலை 999 என்ற படத்தின் வெளியீட்டு விழா நடந்தது. இந்த படத்தின் வெளியீட்டு விழாவில் இயக்குனர் பேரரசு பேசினார் அவர் பேசியபோது பெண்கொடுமைகள் ஆண்களால் மட்டும் நடப்பதில்லை

பெண்களாலும் நடக்கிறது என கூறியுள்ளார்.  டிக் டாக்கில் நடக்கும் செயல்களை சகிக்க முடியவில்லை பல பெண்கள் பேசும் விதமும் நடக்கும் விதமும் மோசமாக இருக்கிறது.

மொபைல் ஃபோனே எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிறது மொபைலில் ஆபாசமாக வீடியோ போடுபவர்களை பிடித்து ஜெயிலில் தள்ள வேண்டும்.

அளவு கடந்த சுதந்திரம்தான் நம் நாட்டை கெடுக்கிறது. நாம் எத்தனை  படங்கள் எடுத்தாலும் இவர்கள் திருந்தாத நிலைதான் உள்ளது.

எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் மதகுருமாராக இருந்தாலும் அவர்கள் தவறு செய்பவராக இருந்தால் பிடித்து உள்ளே தள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment