News
வன அதிகாரியை தாக்கிய புலி: நூலிழையில் தப்பிக்க உதவியது இதுதான்

கேரள மாநிலம் வயநாடு என்ற பகுதியில் இரண்டு வன அதிகாரிகளை திடீரென புலி தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கேரளாவை சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் சிவக்குமார் மற்றும் அவருடைய டிரைவர் இமானுவேல் ஜார்ஜ் ஆகியோர் வனத்தில் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு புலி பாய்ந்து வந்து இருவரையும் தாக்கியது

டிரைவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் வனத்துறை அதிகாரி சிவகுமார் ஹெல்மெட் அணிந்திருந்தால் அவர் உயிர் உயிர் பிழைத்தார்
இதுகுறித்து அவர் கூறியதாவது ’நான் ஹெல்மெட் அணிந்ததால் தான் தற்போது உயிருடன் இருக்கிறேன். திடீரென ஒரு புலி எங்கள் மீது பாய்ந்து தலையைக் கடிக்க முயற்சித்தது. ஆனால் ஹெல்மெட் அணிந்ததால் அதனால் கடிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
