வியாழக்கிழமையில் பிறந்தவரா? உங்களுக்கான பலன்கள் இதோ!

வியாழக்கிழமைக்கு குரு அதிபதி ஆவர். குரு அதிபதியாக உள்ள இரண்டு ராசிகள் மீனம் மற்றும் தனுசு ஆகும். இவர்கள் புத்திசாலியாக இருப்பார்கள். இவர்களிடம் நேர்மறை எண்ணங்கள் அதிகமாக இருக்கும். இவர்கள் போகும் இடமெல்லாம் சிறப்பாக, மதிப்பு, மரியாதை என்று இருப்பார்கள். இவர்கள் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மற்றும் நல்ல பண்புகளுடன் இருப்பார்கள். தலைமை பொறுப்பு ஏற்கும் குணம் இவர்களுக்கு இருக்கும்.

வியாழக்கிழமையில் பிறந்தவர்கள் ஒரு சிலர் சுயநலத்துடன், பேராசையுடன் இருப்பார்கள். மற்றவர்களைப் பற்றி யோசிக்காமல் தான் என்று இருப்பார்கள். இவர்கள் சில பேர் தங்கள் சூழ்நிலைக்காக மற்றவர்களை தூக்கி எரிந்து விடுவார்கள். இவர்கள் நேரத்தை மற்றும் வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்வார்கள். இவர்கள் கடினமாக உழைக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.

இவர்களுக்கு சில நேரங்கள் யார் நல்ல நண்பர்கள் என்று கண்டுபிடிக்க நேரமாகும். அதற்குள் வாழ்க்கை இவர்களுக்கு பல பாடங்கள் கற்று கொடுக்கும். இவர்கள் சுதந்திர வாழ்க்கை வாழ ஆசை கொள்வார்கள். இவர்களை அடக்கி ஆள வேண்டும் என்று நினைத்தால் இறுதியில் தோல்வி தான் அடைவார்கள். நீங்கள் ஒளிவு மறைவின்றி மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசுபவர்களாக இருப்பீர்கள். நீங்கள் சில நேரங்களில் சோர்ந்து விடுவீர்கள். பெரும்பாலும் ஏதாவது செய்து கொண்டே இருப்பீர்கள்.

மற்றவர்களிடம் மதிப்பு மரியாதையுடன் இருப்பீர்கள். யாரேனும் உங்களுக்கு தீங்கு அல்லது கெடுதல் செய்ய நினைத்தால் அதனை மறக்காமல் நீங்கள் பழிக்குப்பழி என்று தீர்த்து கொள்வீர்கள். நீங்கள் அறிவாளியாக இருந்தாலும் கூட சில நேரங்களில் மற்றவர்களுக்கு எரிச்சல் ஏற்படுத்துபவர்களாக இருப்பீர்கள்.

எதார்த்தமாக செயல்படுவீர்கள். பல கலைகள் கற்று கொள்வதில் ஆர்வம் இருக்கும். அதுவே சில நேரங்களில் உங்களுக்கு சோர்வை கொடுத்து விடும். குரு அனைத்து கிரகங்களிலும் சுபமாகவும் ராஜாவை போன்றும் இருப்பதால் நீங்களும் அதே போன்று தான் இருப்பீர்கள். தலைமை தாங்கும் பொறுப்புகள் உங்களை தேடி வரும். வியாழக்கிழமையில் பல பிரச்சனைகள் தீர்ந்து போவதால் இந்தக் கிழமையில் அது சம்மந்தப்பட்ட வேலையில் ஈடுபடலாம். இவர்கள் ஆசிரியர், பிசினஸ், டிரேடிங் போன்ற துறையில் இருப்பார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews