Connect with us

துப்பாக்கி-2 வெளிவருவது உறுதி.. அனல் தெறிக்கும் அப்டேட் !!..

thuppaki pic

பொழுதுபோக்கு

துப்பாக்கி-2 வெளிவருவது உறுதி.. அனல் தெறிக்கும் அப்டேட் !!..

விஜய் தற்போது வம்சி இயக்கும் தளபதி 66 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ஷூட்டிங் ஐதராபாத்தில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்றுவருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் வரை நடக்கும் என கூறப்படுகிறது. முதல் 2022ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் 2023 ஆண்டு பொங்கலுக்கு படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தாலும் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டுவருகிறது.தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரபு, ஷ்யாம் ஆகியோரும் நடிக்கின்றனர்.

thuppaki 1

துப்பாக்கி படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2012 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இது விஜய்க்கு அதிரடி திரில்லர் படமகா அமைந்தது. இதில் விஜய் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், வித்யுத் ஜம்வால் முக்கிய வில்லனாக நடித்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்தார். இப்படம் தீபாவளி பண்டிகையுடன் இணைந்து 13 நவம்பர் 2012 அன்று வெளியிடப்பட்டது. இப்படம் வெளியான 11 நாட்களில் 1 பில்லியன் ரூபாய் வசூலித்தது. மேலும் இப்படம் மிகவும் வெற்றி படமாக அமைந்தது. இது தெலுங்கிலும் துப்பாக்கி என்ற பெயரிலேயே வெளியிடப்பட்டது.

thupakki 3

தற்போது ரசிகர்கள் இப்படத்தியின் 2 ஆம் பாகம் எப்போ வெளிவரும் என எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இதை பற்றி சூப்பர் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. துப்பாக்கி பாடத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் தற்போது மற்ற படங்களில் பிஸியாக இருப்பதால் இவரால் இப்படத்தை எடுக்க முடியுமா என்று தெரியவில்லை. அதற்க்கு பதிலாக லோகேஷ் அல்லது அட்லீ அல்லது வினோத் இயக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Thuppakki2 4

அட்லீ மற்றும் லோகேஷ் விஜயை வைத்து மெர்சல்,பிகில்,தெறி,மாஸ்டர் போன்ற படங்களை எடுத்துள்ளனர் ஆகையால் இவர்களுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top