அடடே! ஆரம்பமே அதகளமா இருக்கே? ‘தளபதி 67’ படத்தின் மாஸ் அப்டேட்!!

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருப்பதால் வெளியீட்டு வேலைகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

அதே சமயம் லோகேஷ் கனகராஜ் – நடிகர் விஜய் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் கடந்த 5ம் தேதி ஏவிஎம் ஸ்டுடியோஸ் பூஜையுடன் தொடங்கியது. இதில் திரிஷா,அனிரூத், தயாரிப்பாளர் லலித் குமார் மற்றும் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செம்ம வைரல்! துணிவு படத்தின் ‘காசேதான் கடவுளடா’ பாடல் வெளியீடு!!

இதற்கிடையில் ‘தளபதி 67’ படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகியோர் இடம்பெறுவதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்து உள்ளார். இந்நிலையில் படத்தின் 10 நாட்கள் படப்பிடிப்பு சென்னையில் நடக்க இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து 50 நாட்கள் காஷ்மீர், லடாக் போன்ற இடங்களில் சூட்டிங் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. துப்பாக்கி படத்திற்கு பிறகு காஷ்மீரில் அதிக நாட்கள் சூட்டிங் நடைபெறும் விஜய்யின் 2-வது படம் இதுதான் என கூறப்படுகிறது.

எனக்கு நடிக்க தெரியாது! – கவலையில் நடிகை டாப்சி!!

இருப்பினும், அதிகாரபூர்வ அறிவிப்பை படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விரைவில் வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.