பொங்கல் ரேஸில் வாரிசை முந்தியது துணிவு; எத்தனை கோடி தெரியுமா?

தமிழகத்தில் அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய படங்கள் 2023-ம் ஆண்டின் மிக திரைப்படங்களாக கருதப்படுகிறது. கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பின் ஒன்றாக ரிலீஸ் ஆகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தமிழகத்தில் அதிகளவில் துணிவு படத்திற்கு திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் அதிக வசூல் கிடைக்கும் என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்து இருந்தனர். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 24.6 கோடி வசூல் சாதனை படைத்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

அதே போல் உலகளவை பொறுத்த வரையில் சுமார் 25 கோடி வசூல் சாதனையை படைத்துள்ளதாக தெரிகிறது.
இருப்பினும் வாரிசு படமானது சுமார் ரூ.19 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் வாரிசு படம் நல்ல வசூல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வருகின்ற ஜனவரி 14-ம் தேதி தெலுங்கு வெஷன் ஆன வாரசுடு வெளியாகுவதால் வருல் காலங்களில் இரண்டு படங்களுக்குமே நல்ல வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.