‘துணிவு’ படத்திற்காக வேற லெவல் புரமோஷன்: அதிர்ச்சியில் ‘வாரிசு’ படக்குழு!

அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த இரண்டு படக்குழுவினர்களும் போட்டி போட்டுக் கொண்டு படத்தை புரமோஷன் செய்துவருகின்றனர்.

thunivu day4   குறிப்பாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல்கள் என மாறி மாறி இரண்டு படக்குழுவினர் வெளியிட்டு தங்களது ரசிகர்களை மகிழ்ச்சியில் திணற வைத்து வருகின்றனர்.

thunivu day3இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்ததை அடுத்து அந்த படத்தின் புரமோஷன் விண்ணை தாண்டியது. இதனை அடுத்து உண்மையாகவே விண்ணில் அஜித் நடித்த துணிவு படக்குழுவினர் புரமோஷன் செய்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

thunivu day1துபாயில் ஹெலிகாப்டரில் இருந்து ஸ்கை டைவிங் செய்யும் நபர் ஒருவர் பாராசூட் மூலம் குதித்து துணிவு படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

thunivu day2மேலும் வரும் 31ஆம் தேதி இந்த படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக இந்த படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை பெற்ற லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது. துணிவு படத்திற்காக வேற லெவல் லைகா நிறுவனம் புரோமோஷனில் இறங்கியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.