அடி தூள்! பொங்கலுக்கு ரிலீஸாகும் ‘துணிவு’.. கொண்டாடும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் 90 கிட்ஸ் காலக்கட்டத்தில் தொடங்கி இன்று முதல் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருபவர் நடிகர் அஜித். இந்நிலையில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான படம் ‘வலிமை’.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘துணிவு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் படத்தின் எதிர்பார்ப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.

நுரையீரல் அறுவை சிகிச்சை! “ ரூ.5 லட்சம் ” கொடுத்த கலைப்புலி எஸ் தாணு!

இந்த சூழலில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், மகாநதி ஷங்கர் போன்றோர் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. அதே சமயம் “துணிவு” திரைப்படத்தின் இறுதி கட்டப்படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஹைதராபாத், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் ஷூட்டிங்கில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்த சூழலில் துணிவு படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் அர்ணவிற்கு நிபந்தனை ஜாமின்: நீதிமன்றம் அதிரடி!!

அதன் படி, அடுத்த வருடம் ஜனவரி 12-ம் தேதி துணிவு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.