துணிவு படத்தின் ‘காசே தான் கடவுளடா’ பாடல் ரிலீஸ் எப்போது? போனிகபூர் டுவிட்

அஜித் நடித்த துணிவு திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

இந்த படத்தில் இடம்பெற்ற சில்லா சில்லா என்ற பாடலை அனிருத் பாடியுள்ளார் என்பதும் இந்த பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது தெரிந்ததே.

இதனை அடுத்து இந்த படத்தில் இடம்பெற்ற இன்னொரு பாடல் காசேதான் கடவுளடா என்ற பாடல் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் இந்த பாடல் வெளியாகும் தேதி மற்றும் நேரத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இந்த பாடல் இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகும் என அவர் அறிவித்துள்ளதை அடுத்து அஜீத் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். முதல் பாடலான சில்லா சில்லா பாடலைப் போலவே காசே தான் கடவுளடா என்ற இந்த பாடலையும் சூப்பர் ஹிட்டாக வேண்டும் என அஜித் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இன்று வெளியாகும் இந்த பாடல் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் போனிகபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ளது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.