வெளியானது ‘துணிவு’: பீர் அபிஷேகம் டூ டிஜே மியூசிக் வரை – தல ரசிகர்களின் கொண்டாட்டம்!

ரசிகர் பட்டாளத்துடன் ஆரவாரமாக அஜித் நடித்த துணிவு திரைப்படம் நள்ளிரவு 1 மணிக்கு திரையரங்களில் வெளியானது. இரவு 9 மணி முதல் 12 மணி வரை DJ ஆடியோ போட்டு உற்சாகமாக நடனமாடியும், பட்டாசு கையில் வெடித்தும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் பொங்கல் மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் முக்கிய நடிகர்களின் திரைப்படம் வெளியாவது இயல்பு. அந்த வகையில், அஜித் நடித்த “துணிவு” திரைப்படம் இன்று நள்ளிரவு 1 மணி அளவில் வெளியானது. அந்த வகையில் தமிழ்நாட்டில் பொங்கல் மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் முக்கிய நடிகர்களின் திரைப்படம் வெளியாவது இயல்பு. அந்த வகையில், அஜித் நடித்த “துணிவு” திரைப்படம் இன்று நள்ளிரவு 1 மணி அளவில் வெளியானது. அந்த வகையில் மதுரையில் தாரை தப்பட்டைகள் முழுக்க இரவு முழுவதும் தியேட்டர் வாசலில் கொண்டாடி தீர்த்த ரசிகர்கள், முதல் நாள் முதல் காட்சியை ஆராவாரத்துடன் கண்டு ரசித்தனர்.

https://twitter.com/AnandKrish17/status/1612868291248427010

காஞ்சிபுரத்தில் உள்ள திரையரங்குகளில் 1 மணி அளவில், அஜித் திரைப்படம் வெளியானது. இதனை ஒட்டி காஞ்சிபுரத்தில் உள்ள திரையரங்குகளில் இரவு 10 மணியிலிருந்து ரசிகர்கள் கூட்டம் கூட துவங்கியது. காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ள அருணா திரையரங்கில் ( DJ MUSIC ) அமைக்கப்பட்டு அஜித் மற்றும் சினிமா பாடல்கள் இசைக்கப்பட்டு அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியாக நடனம் ஆடினர். அதேபோல் சரம் வானவேடிக்கைகள் உள்ளிட்டவை வெடிக்கப்பட்டு திரைப்படத்தை வரவேற்றனர். நள்ளிரவு 1 மணி காட்சி என்றாலும், பெண்கள் குழந்தைகள் உட்பட குடும்பத்துடன் வந்தும் அஜித் திரைப்படத்தை கண்டு ரசித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராசிபுரத்தில் உள்ள 4 தியேட்டர்களிலும் துணிவு திரைப்படம் வெளியான நிலையில், திரை அரங்கின் முன் வைக்கப்பட்டிருந்த அஜித்தின் படத்திற்கு அவரது ரசிகர்கள் கையிலே பட்டாசுகளை வெடித்தும், சூடம் ஏற்றி தேங்காய் உடைத்தும் ஆட்டம் பாட்டத்துடன் வானவேடிக்கையுடன் தங்களின் இரு சக்கர வாகனங்களின் சைலன்சரை அலற விட்டு அஜித் வாழ்க தல அஜித் தல அஜித் என முழக்கங்களை எழுப்பி கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் முறையாக எப்போதும் இல்லாத வகையில் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் நள்ளிரவு ஒரு மணிக்கு வெளியானதை முன்னிட்டு படம் வெளியாகும் திரையரங்கத்திற்கு முன்பு வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையில் உள்ள அஜித்தின் படத்திற்கு அஜித்தின் ரசிகர்கள் பாலாலும் பீராலும் அபிஷேகம் செய்தனர்.

தூத்துக்குடியில் உள்ள தியேட்டர் ஒன்றில் தல அஜித்தின் துணிவு படம் வெளியாக உள்ளதை முன்னிட்டு அஜித் ரசிகர்கள் இன்னிசை கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஏராளமான அஜித் பாடல்களை பாடச்சொல்லி வைப் ஆன அஜித் ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.