துணிவு படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலங்கள்! அஜித்துடன் எடுத்துக்கொண்ட மாஸான செல்ஃபி!

நடிகர் அஜித் இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோருடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த திரைப்படம் துணிவு. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தில் அசுரன் புகழ் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார், மேலும் சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், பிரேம்குமார், வீரா மற்றும் பலர் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக குழு தற்போது தாய்லாந்துக்கு சென்றுள்ளது. அங்கு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சமீபத்தில் இந்த படத்தில் 3 பெரிய தொலைக்காட்சி பிரபலங்களும் இணைந்துள்ளனர்.

63416e13f1788

தமிழ் ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் – பவானி ரெட்டி (சீசன் 5), அமீர் (சீசன் 5) மற்றும் சிபி சந்திரன் (சீசன் 5) மூவரும் துணிவு படத்தில் இணைந்துள்ளது நாம் அறிந்ததே.

இந்நிலையில் பேங்காக் படப்பிடிப்பில் நடிகர் அஜித், பிக்பாஸ் பிரபலம் அமீர், பாவனி உடன் எடுத்த செல்ஃபி புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த புகைப்படங்களை அமீர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ரசிகர்களை வேட்டையாட அழைக்கும் கமல்! வைரலாகும் பிக்பாஸ் வீடியோ!

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment