Connect with us

அட்ராசக்க….! 24 மாவட்டங்களில் இடி மின்னலோடு பெய்யப் போகுது மழை!!

கனமழை

Tamil Nadu

அட்ராசக்க….! 24 மாவட்டங்களில் இடி மின்னலோடு பெய்யப் போகுது மழை!!

அட்ராசக்க….! 24 மாவட்டங்களில் இடி மின்னலோடு பெய்யப் போகுது மழை!!

தமிழகத்தில் தற்போது வெயில் காலம் மெல்ல மெல்ல தொடங்கிவிட்டது. இதனால் கோடை வெயிலின் தாக்கம் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் அதி தீவிரமாக உள்ளது. இவ்வாறுள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை வட மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்து கொண்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 24 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, சேலம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top