துலாம் தை மாத ராசி பலன் 2023!

சுய முயற்சியின் மூலம் நீங்கள் நினைத்த விஷயங்களை அடைய உத்வேகத்துடன் உழைப்பீர்கள். சனி பகவான் 4 ஆம் இடத்தில் இருந்து 5 ஆம் இடத்திற்கு தை மாதத்தின் பிற்பாதியில் இடப் பெயர்ச்சி செய்கிறார்.

வேலைவாய்ப்புரீதியாக வேலைப்பளு அதிகமாக இருக்கும், பெரிதளவில் எதிர்பார்த்த பாராட்டு, பதவி உயர்வு என எதுவும் கிடைக்காமல் அனைத்தும் தள்ளிப் போகும் காலமாக இருக்கும். சக பணியாளர்களுடன் மன வருத்தம் ஏற்படும்.

தொழில்ரீதியாக அலைச்சல் மிகுந்த மாதமாக இருக்கும். சமூக அங்கீகாரத்துக்காக உழைக்கும் மாதமாக இருக்கும். எந்தவொரு விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுதல் நல்லது. வருமானம் அதிகரிக்கும்.

குடும்பத்தில் பல நபர்களின் குறுக்கீடு இருப்பதால் கணவன்- மனைவி இடையே பிரச்சினைகள் ஏற்படும். குழந்தைகள் ஆரோக்கியம்ரீதியாக கவனத்துடன் இருத்தல் நல்லது. உடன் பிறப்புகளுடன் சண்டை- சச்சரவுகள் ஏற்படும்.

அடுத்தவர்கள் கேட்காவிட்டால் அறிவுரை கூறுவதைத் தவிர்க்கவும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை மூன்றாம் நபர் தலையீட்டைத் தவிர்க்கவும்.

வாழ்க்கைத் துணைக்கு ஆரோக்கியம்ரீதியான குறைபாடு இருக்கும். பேசும்போது கவனத்துடன் பேசுதல் நல்லது. பண விஷயங்களில் செலவுகள் அதிகரிக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.