துலாம் தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன் 2023!

துலாம் ராசியினைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் கொடுத்த துன்பங்களுக்கு விடிவு தரப் போகிறார் 7 ஆம் இடத்தில் இருக்கும் குரு பகவான். திருமண காரியங்களைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் தடங்கல்களைச் சந்தித்த நிலையில் திடீரென திருமணம் கைகூடும்.

தொழில்ரீதியாக அடுத்த கட்ட வளர்ச்சி மற்றும் ஏற்றத்தினைக் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும். பணப்புழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். ஆனால் கையில் கிடைக்கும் பணத்தினை விரயமாக்காமல் சேமிப்பதில் கவனம் செலுத்துதல் அவசியம்.

உடல் நலன் ரீதியாக இருந்த விரயச் செலவுகள் ஏற்படும், அதிலும் குழந்தைகள் உடல் நலன் பாதிக்கப்படுவர். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன் – மனைவி இடையேயான பிரச்சினைகள் குறைந்து புரிதல் அதிகரிக்கும்.

உடன் பிறப்புகளுடன் இருந்த பிரச்சினைகள் சரியாகி, அனைவரும் ஒன்று கூடுவர். கூட்டுத் தொழிலில் லாபங்கள் அதிகரிக்கும். சமூகத்தில் முக்கிய அந்தஸ்து கிடைக்கப் பெறும். குழந்தைகளின் உடல் நலன் ரீதியாக கவனம் செலுத்துதல் அவசியம்.

பல ஆண்டுகளாக நீங்கள் வாங்க நினைத்திருந்த அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிறுகச் சிறுகச் சேமித்து பழைய கடனை முழுவதுமாக அடைப்பீர்கள். தங்க நகைகளை வாங்கி மகிழ்வீர்கள்.

கணவன் குடும்பத்தார் பிரச்சினைகளையும், நெருக்கடிகளையும் கொடுப்பர். உங்கள் பிரச்சினைகளை சுற்றத்தாரிடம் பகிர்ந்தால் அதுவே உங்களைத் தாக்கும் ஆயுதமாக மாறிவரும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews