துலாம்: சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்!

துலாம் சுபகிருது வருட பலன்கள்

நேர்மையான குணம் கொண்ட துலாம் ராசி அன்பர்களுக்கு இந்த வருடம் சுமாரான வருடமாக இருக்கும். உடல் நிலையினைப் பொறுத்தவரையில் எச்சரிக்கை தேவை. மேலும் மன நிலையினைப் பொறுத்தவரை சஞ்சலம், கோபம், சந்தேகம் என பல விதப் பிரச்சினைகளுக்கு ஆளாவீர்கள்.

பொருளாதார ரீதியாக நீங்கள் மிகச் சிறந்த முன்னேற்றத்தைக் காண்பீர்கள். மேலும் தொழில் ரீதியாக லாபம் கிட்டும் வருடமாக அமையும். வேலைபார்ப்போருக்கு உயர் பதவி, நினைத்த இடமாற்றங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

குடும்பத்தில் ஏற்கனவே இருந்த பிரச்சினைகள் நீங்கி, மகிழ்ச்சி தாண்டவமாடும். உங்கள் தைரியத்தைப் பதம் பார்க்கும் வகையிலான சூழ்நிலை உருவாகும். அதனால் மன தைரியத்துடன் செயல்படுவது நல்லது.

சகோதர- சகோதரிகளுடன் சச்சரவு ஏற்பட வாய்ப்புண்டு, பங்காளிகள் இடையேயான பிரச்சினைகள் பெரிதாகும், நிதானத்துடன் செயல்படுவது நல்லது. சமயோசித புத்தியுடன் செயல்பட்டு பல சிக்கலான பிரச்சினைகளை முடிப்பீர்கள். தாயின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை.

புதிதாக வீடு கட்டவோ அல்லது சில்லறை வேலைகளைச் செய்யவோ வேண்டாம். வண்டி, வாகனங்களை வாங்குவதை ஒத்திப் போடுதல் வேண்டும். குல தெய்வக் கோவில் அருள் சுமாராக இருப்பதால் குல தெய்வக் கோவிலுக்குச் சென்று பொங்கல் வைத்து அபிஷேகம் ஆராதனை செய்து வரவும்.

குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைப்பதற்கான காலமாக இருக்கும். புதிய கடன் வாங்குவதற்கான காலமாக இருக்கும். திருமணம் தள்ளிப் போவதற்கான வாய்ப்புகள் உண்டு. திருமணமான தம்பதிகளிடையே பிரச்சினைகள் ஏற்பட்டாலும் விரைவில் அனைத்தும் சரியாகும்.

பூர்விக சொத்துகளில் பிரச்சினைகள் ஏற்பட்டு மன சஞ்சலம் ஏற்படும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews