துலாம் செப்டம்பர் மாத ராசி பலன் 2022!

துலாம் இராசியினைப் பொறுத்தவரை சூரியன் 11 ஆம் இடத்திலும், செவ்வாய் 8 ஆம் இடத்திலும், புதன் 12 ஆம் இடத்திலும், குரு பகவான் 6 ஆம் இடத்திலும், சனி பகவான் 4 ஆம் இடத்திலும் உள்ளது.

இராகு- கேது ஜென்மத்தில் கேது, 7 ஆம் இடத்தில் ராகு உள்ளது. சனி பகவான் தொழில்ரீதியாக மன உளைச்சல்கள், மன அழுத்தங்களைக் கொடுப்பார்.

வேலை மாற்றம், இடமாற்றம், பதவி மாற்றம் என பல மாற்றங்களை எதிர்பார்த்து இருப்பீர்கள். வேலைசார்ந்து உயர் அதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம், அது பெரும் பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்லும்.

எதையும் கண்டும் காணாததுபோல் பொறுமையுடன் செயல்படுங்கள். ஆழ்ந்து யோசித்து மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள். பெரும் முயற்சிகள், மாற்றங்கள் என எதையும் எதிர்பார்க்காதீர்கள், குடும்பத்தில் கணவன் – மனைவி இடையே பெரும் பிரச்சினைகள் ஏற்படும்.

காதலர்கள் மத்தியில் வெறுப்புணர்ச்சி அதிகரிக்கும் கோபங்கள் ஏற்படும். பிரச்சினைகள் குறித்து கிளறிப் பேசாமல் இருத்தல் நல்லது. திருமணம் சார்ந்த காரியங்கள் தள்ளிப் போகும், குழந்தை பாக்கியம் எதிர்பார்த்து இருப்போருக்கும் மோசமான காலமாக இருக்கும்.

வீடு, மனை வாங்குதலில் பிரச்சினைகள் ஏற்படும், நன்கு யோசித்துச் செயல்படுதல் நல்லது. வண்டி, வாகனம் ரீதியாக எதையும் வாங்காமல் இருத்தல் நல்லது. உடல் ஆரோக்கியம் குறைந்து காணப்படும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.