துலாம் செப்டம்பர் மாத ராசி பலன் 2018!

அன்புள்ள துலாம் ராசியினர்களே, இந்த செப்டம்பர் மாதம் உங்களுக்கு திடீர் திருப்பங்கள் ஏற்படக்கூடிய மாதமாக இருக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் சொந்த வீடான துலாம் ராசியில் குருவுடன் இணைந்து இருப்பதால் தொட்டது துலங்கும். அழகு, இளமை கூடும். இம்மாதத்தில் பல விதமான மாற்றங்கள் நிகழ இருக்கின்றது. கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். முடங்கி கிடந்த காரியங்களை படிப்படியாக முடித்து காட்டுவீர்கள். விட்டுப்போன சொந்தபந்தங்கள் மீண்டும் இணைவார்கள்.

செப்டம்பர் 6-ம் தேதி செவ்வாய் வக்ர நிவர்த்தியாவதால் எதிர்பாராத வகையில் அதிக அளவில் நன்மைகள் நடைபெறக்கூடும். சிலருக்கு மனை, வீடு, புதிய வாகனம் வாங்கும் யோகம் அமையக்கூடும். உங்கள் திறமையைக் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு இருப்பீர்கள். இதுவரை நீங்கள் உழைத்த உழைப்பிற்கு எவ்வித பலனும் கிடைக்கவில்லையே என்று இருந்தவர்களுக்கு நற்செய்தி வரும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

சனி வக்ர நிவர்த்தியாகி இருப்பதால் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரக்கூடும். வருமானம் அதிகரிக்கும். புதன் சூரியனோடு இணைந்து புத-ஆதித்ய யோகம் உருவாகிறது. புதன் சிம்மம் ராசியில் இருக்கும் பொழுது நீங்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்களில் வெற்றி கிட்டும். அரசு சார்ந்த பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு வரக்கூடும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வரக்கூடும்.

செப்டம்பர் 3-ம் தேதி புதன் அஸ்தமனம் ஆவதால் இல்லத்தில் இருப்பவர்களிடம் சிறு சிறு வாக்குவாதம் வந்து நீங்கும். செப்டம்பர் 15-ம் தேதி புதன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் சுபவிரயங்கள் அதிகரிக்கும். நல்ல வரன் அமையக்கூடும். பிள்ளைகளின் வழியில் சுபச்செலவு உண்டாகும். வியாபாரத்தில் புதிய யுத்திகளை பயன்படுத்தி வியாபாரத்தை பெருக்குவீர்கள். மூத்த சகோதரர், தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment