துலாம் புரட்டாசி மாத ராசி பலன் 2022!

6 ஆம் இடத்தில் உள்ள குரு பகவானால் பொருளாதாரம் மேம்பட்டுக் காணப்படுவீர்கள். கடன் சுமை குறையும், எதிரிகள் ஒழிந்து போவார்கள். 4 ஆம் இடத்தில் சனி பகவான் ஆட்சி பீடத்தில் உள்ளார், தாய்வழி சொந்தங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும்.

வண்டி, வாகனங்களால் ஆதாயங்கள் கிடைக்கப் பெறும், தொழில் மற்றும் உத்தியோகம் ரீதியாக மேன்மை ஏற்படும். நஷ்டத்தில் இருந்த தொழில் மேம்பட்டு ராஜநடை போடும், கிடைக்கும் லாபத்தில் தொழிலை அபிவிருத்தி செய்ய முயற்சிப்பீர்கள்.

வேலைவாய்ப்புரீதியாக பதவி உயர்வு, பணியிட மாற்றம், சம்பள உயர்வு என அனைத்தையும் எதிர்பார்க்கலாம். சுபத் தன்மை அதிகரித்துக் காணப்படும், இராசியில் கேதுவும், சனி பகவானின் பார்வையும் விழுவதால் ஒரு விஷயத்தைச் செய்வதில் கால தாமதம் ஏற்படும்.

சனி பகவானை எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வருதல் வேண்டும், செவ்வாய் 2 ஆம் இடத்தைப் பார்ப்பதால் பூர்விகச் சொத்துகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும், அசையாச் சொத்துகள்ரீதியான லாபம் கிட்டும்.

7 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் கணவன்- மனைவி இடையேயான பிரச்சினை பிளவுக்கு இட்டுச் செல்லும். நண்பர்கள், தொழில் கூட்டாளர்கள் எதிரி மனப்பாமையுடன் நடந்து கொள்வர். உடன் பிறப்புகளுடன் மனச் சங்கடங்கள் ஏற்படும்.

வண்டி, வாகனங்களால் செலவினங்கள் ஏற்படும், உடல் ஆரோக்கியம் மேம்பட்டுக் காணப்படுவீர்கள். பிள்ளைகளால் பெருமிதம் கொள்வீர்கள்.  கோர்ட்டுகளில் நடக்கும் வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.