துலாம் ராசியினருக்கு நீண்ட நாட்களாக தொல்லையாக இருந்த வந்த பிரச்சனைகள் இந்த பங்குனி மாதத்தில் ஒரு முடிவுக்கு வரும். இதுவரை ஐந்தாம் இடத்தில் இருக்கும் சூரியனால் பல வித பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு இந்த மாதம் சூரியன் ஆறாம் வீட்டில் வருவதால் தொல்லைகள் அகலும். சூரியன், மீனம் ராசியில் உங்கள் ராசியில் இருந்து ஆறாம் வீட்டில் இருப்பது சாதகமான பலன்களைக் கொடுக்கும்.
அதிசார குரு வக்கிரம் பெற்று இருப்பதால் உங்களுக்கு பணவரவு சீராக இருக்கும். உங்கள் திட்டங்கள் எல்லாம் தடையின்றி நிறைவேறும். ஏப்ரல் 10-ம் தேதிக்கு பிறகு குரு பகவான் உங்கள் ராசிக்கு வருவதால் அதன் பிறகு நன்மைகள் குறைய தொடங்கும்.
மூன்றாம் வீட்டில் செவ்வாய் மற்றும் சனி சேர்க்கை உங்களுக்கு நற்பலன்களை கொடுக்கும். மூன்றாம் இடத்தில் செவ்வாய் உங்களுக்கு தைரியம், புதிய தெம்பு கொடுக்கும்.
சூரியன் மற்றும் புதனால் பணவரவு, பொருளாதாரம் நன்றாக இருக்கும். தாயாரின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். தாயாரின் உடலில் சிறு பாதிப்புகள் தென்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். சகோதர, சகோதிரி வகையில் சண்டை , மனக்கசப்பான சம்பவங்கள் நடைபெறும். வண்டி, வாகனம் பழுதாகி வீண் செலவு வரக்கூடும்.
புண்ணிய ஸ்தலம், ஆன்மீக சுற்றலா சென்று வருவீர்கள். ராகு சாதகமற்ற நிலையில் இருப்பதால் சிறு சிறு பிரச்சனைகள் அவ்வப்பொழுது தோன்றி மறையும். குலதெய்வ வழிபாடு, விடுபட்ட பிரார்த்தனைகளை எல்லாம் சிறப்பாக செய்து முடிக்கும் நேரம் அமையும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். சுக்கிரன் ஆறாம் வீட்டில் இருப்பதால் வீண் விரயங்கள் ஏற்படும். புதன் சாதகமாக இருப்பதால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகளின்றி ஒற்றுமை நிலவும். மார்ச் 27-ம் தேதிக்கு பிறகு சுக்ரன் உங்கள் ராசியைப் பார்ப்பதால் தள்ளி போன சுப விசேஷம் கைக்கூடி வரும். மார்ச் 28-க்கு பிறகு உறவினர் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாக்கும்.
பெண்களுக்கு தள்ளிப் போன திருமண பேச்சு வார்த்தைகள் நல்ல விதமாக முடிவு பெறும்.
வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் நல்ல விதமாக அமையும்.
தொழில், வியாபாரம் போன்றவற்றில் அதிக லாபம் எதிர்பார்க்கலாம். துலாம் ராசியினருக்கு மார்ச் 26, 27-ம் தேதி சிறப்பாக அமையும்.
மாணவர்கள் போட்டிகள் மற்றும் தேர்வில் வெற்றி அடைவார்கள்.
பரிகாரம்:
வெள்ளிக்கிழமை லட்சுமி வழிபாடு செய்து வந்தால் அதிகளவில் நன்மைகள் நடைபெறும்.
வியாழக்கிழமை குரு பகவானுக்கும் , தட்சிணாமூர்த்திக்கும் விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் நீண்ட நாட்களாக இருந்து வரும் சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள்.