துலாம் அக்டோபர் மாத ராசி பலன் 2022!

1 ஆம் இடத்தில் கேது, 12 ஆம் இடத்தில் சுக்கிரன், சூர்யன், புதன், 6 ஆம் இடத்தில் குரு, 8 ஆம் இடத்தில் செவ்வாய், 4 ஆம் இடத்தில் சனி என கோள்களின் இட அமைவு உள்ளது.

கோள்களின் இட அமைவு சுமாரான நிலையிலேயே உள்ளது, தொழில் ரீதியாக எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் இருத்தல் நல்லது. புதிதாக வேலைக்கும் முயற்சி செய்வோர் தோல்விகளால் துவண்டு விடாதீர்கள். பண வரவு குறித்த உங்கள் எதிர்பார்ப்பு பொய்த்துப் போகும்.

தொழில்ரீதியாகவும் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் சுமாராகவே இருக்கும்.

குடும்பத்தில் 17 ஆம் தேதி வரையிலான காலகட்டம் மன நெருக்கடியினைக் கொடுப்பதாக இருக்கும். அதன்பின்னர் குடும்பத்தில் இருக்கும் சண்டை, சச்சரவுகள் குறைந்து ஓரளவு நிம்மதி ஏற்படும்.

திருமண சார்ந்த காரியங்களில் தடைகள் ஏற்படும், இப்போதைக்கு சுப காரியங்களை தள்ளி வைக்கவும். கணவன்- மனைவி இடையே பிளவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள், பொறுமையுடன் செயல்படுதல் வேண்டும்.

மாணவர்களைப் பொறுத்தவரை கல்வியில் சிறப்பாகவே செயல்படுவர். உடல் நலனைப் பொறுத்தவரை கூடுதல் கவனம் தேவை, மருத்துவரீதியான விரயச் செலவுகள் ஏற்படும்.

வண்டி, வாகனங்களால் செலவுகள் ஏற்படும், இரவு நேரப் பயணங்கள், வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.