துலாம் மே மாத ராசி பலன் 2023!

துலாம் ராசியினைப் பொறுத்தவரை மே மாதத்தில் குரு- ராகு-சூர்யன்- புதன் என நான்கு கிரகங்களும் 7 ஆம் இடத்தில் உள்ளது. சனி பகவான் 5 ஆம் இடத்தில் உள்ளார்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை இது உங்களுக்கு ஏற்ற மிகச் சிறந்த காலகட்டமாகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு, இடமாற்றம் என நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

புது மாற்றங்களைச் செய்ய நினைப்போருக்கு ஏற்ற காலமாக இது இருக்கும், தொழில்ரீதியாக புதுத் தொழில் செய்தல், தொழிலை அபிவிருத்தி செய்தல், கூட்டுத் தொழில் செய்தல் என எந்தவொரு புது முடிவுகளையும் துணிச்சலோடு எடுக்கலாம்.

பொருளாதார நிலை என்று கொண்டால் ஏற்றமான காலகட்டமாக இருக்கும். ஓரளவு சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்கள். வண்டி, வாகனங்கள் வாங்குதல், நிலம் வாங்குதல் போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.

இதையும் படியுங்கள்: சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

திருமண காரியங்களைப் பொறுத்தவரை இதுவரை திருமணம் தள்ளிப் போய்வந்த நிலையில்  இனி உங்கள் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் வகையில் அதிரடியாக வரன்கள் கைகூடும். குழந்தை பாக்கியத்துக்கு எதிர்பார்த்து இருப்போருக்கு நற் செய்தி கிடைக்கப் பெறும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்-மனைவி இடையேயான பிரச்சினைகளை அவர்களே பேசிப் புரிந்து கொள்வர். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பிரச்சினைகள் சரியாகும். மேலும் நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்: உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

மாணவர்களைப் பொறுத்தவரை எதிர்காலத் திட்டங்கள் குறித்து சிறப்பாகத் திட்டமிடலாம். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை மனநிறைவான சூழல் ஏற்படும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews