துலாம் மார்கழி மாத ராசி பலன் 2022!

ராசிக்கு 2 ஆம் இடத்தை குரு பகவான் பார்க்கிறார்; குடும்பத்தில் சந்தோஷம், மகிழ்ச்சி அதிகரித்துக் காணப்படும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும், போதுமான பணவரவு, பொருள் வரவு சிறப்பாக இருக்கும்.

வீட்டிற்கு உறவினர்கள் வருகைபுரிவார்கள். 3 ஆம் இடத்தில் சுக்கிரன் உள்ளார். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

எடுக்கும் முயற்சிகள் வெற்றியினைக் கொடுக்கும், வண்டி, வாகனங்களை வாங்கும் முயற்சியினைச் செய்வீர்கள். பூர்விகச் சொத்துகள்ரீதியான பிரச்சினைகள் சுமுக நிலைக்குவரும்.

புதிதாக வேலைவாய்ப்பு தேடுவோருக்கும், வேறு வேலைக்கு முயற்சிப்போருக்கும் ஏற்ற காலமாக இது இருக்காது. பழைய கடன் ஓரளவு குறையும். கணவன்- மனைவி இடையேயான பிரச்சினைகள் பிரிவுக்கு இட்டுச் செல்லும்.

அசையாச் சொத்துகள்ரீதியாக பணவரவு இருக்கும். யோக பாக்கியம் நிறைந்த காலகட்டமாக மார்கழி மாதம் இருக்கும். ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்வீர்கள், வேலைவாய்ப்புரீதியாக பணிச்சுமை அதிகரிக்கும்.

தொழில் செய்வோர் நஷ்டத்தில் இருந்து மீண்டு லாபத்துக்குள் அடியெடுத்து வைப்பீர்கள். 12 ஆம் இடத்தினை குரு பகவான் பார்ப்பதால், செலவுகள் அதிகமாக இருந்தாலும் அவை சுபச் செலவுகளாகவே இருக்கும்.

இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்கவும், வண்டியில் செல்லும்போது கவனமாக இருத்தல் வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews