துலாம் கார்த்திகை மாத ராசி பலன் 2022!

துலாம் ராசி அன்பர்களுக்கு பணப் புழக்கம் அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது. அரசாங்கம்ரீதியான உதவிகள் கிடைக்கப் பெறும். இரண்டாம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால் பண வரவு சிறப்பாக இருக்கும், கார்த்திகை இரண்டாம் பாகம் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.

ராசிநாதன் சுக்கிரன் மூன்றாம் இடத்தில் மறைவதால் தொட்டது துலங்கும். எதிரிகளின் பலம் அதிகரித்துக் காணப்படும். வார்த்தைகளில் கவனம் தேவை. சேமிப்புகளை அதிகப்படுத்துவீர்கள், புதிதாக கடன் எதையும் வாங்காதீர்கள்.

சனி பகவானின் பார்வையில் குரு பகவான் இருக்கிறார். வேலைவாய்ப்புரீதியாக தடுமாற்றங்கள் நிறைந்து காணப்படுவீர்கள். மேல் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவீர்கள், வீண் வாக்குவாதங்கள் எதையும் செய்யாது இருத்தல் நல்லது.

தொழில்ரீதியான அலைச்சல்கள் ஆதாயத்தைக் கொடுக்கும். புதிய முதலீடுகள் எதையும் செய்யாது இருத்தல் நல்லது. எதிர்பாராத பண வரவு உங்களின் நீண்ட கால கனவினை நிறைவேற்றும். உங்களின் செல்வாக்கு குடும்பத்தில் அதிகரித்துக் காணப்படும்.

குழந்தைகளால் உங்களுக்கு நல்ல பெயர் ஏற்படும். நண்பர்களே எதிரிகளாக மாற வாய்ப்புண்டு. திருமண காரியங்களைப் பொறுத்தவரை கார்த்திகை முதல் பாதி நற் செய்தி கொடுப்பதாய் இருக்கும்.

வேலைவாய்ப்பு ரீதியாக பளு நிறைந்து காணப்படும். தொழில் கூட்டாளர்களுடன் பிளவு ஏற்படும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.