Astrology
துலாம் ராசி ஜூன் மாதம் ராசி பலன்கள் 2018!
அன்புள்ள துலாம் ராசிக்காரர்களே, இந்த ஜூன் மாதம் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும் மாதமாக இருக்கப் போகின்றது. சுக ஸ்தானத்தில் செவ்வாய் உச்சம் பெற்று இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வாழ்க்கை தரம் உயரும். இதுவரை தடைபட்டு கொண்டு இருந்த விஷயங்கள் யாவும் நல்ல முடிவுக்கு வரக்கூடும். இந்த மாதத்தில் உங்கள் தேவைகள் எல்லாம் பூர்த்தியாகும். நினைத்த காரியங்கள் கைக்கூடும். இல்லத்தில் மூத்தவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மாறும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.
சனி வக்கிரத்தில் மூன்றாம் இடத்தில் இருப்பதால் சகோதர சகோதரி வகையால் மனக்கசப்பு ஏற்படக்கூடும். சுக ஸ்தானத்தில் கேது பகவான் பலம் பெற்று இருப்பதால் அவ்வப்போது ஆரோக்கிய குறைபாடு ஏற்படக்கூடும். உடல் அசதி, சோர்வு, கை, கால், மூட்டு வலி தோன்றி மறையும். ஒரு சிலருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படுகிறதே என்ற மனக்கவலை வரக்கூடும்.
தாய்வழி மற்றும் அவர்களின் உறவுகளால் மனக்கசப்பு ஏற்படக்கூடும். பத்தாம் இடத்தில் ராகு பகவான் பலமாக இருப்பதால் தொழில் வளர்ச்சியில் எவ்வித பாதிப்புகளும் உண்டாகாது. குரு வக்கிரத்தில் இருப்பதால் சகோதர சகோதிரியுடன் கருத்து மோதல்கள் தோன்றக்கூடும். மாத தொடக்கத்தில் மிதுனத்தில் சுக்கிரன் இருக்கும்போது ஆரோக்கியம் சீராகும். கடகத்தில் சுக்கிரன் ஜூன் 9-ம் தேதி பத்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ஒரு சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஜூன் 5-ம் தேதி புதன் மிதுனத்தில் சஞ்சரிக்கும்போது பல வாய்ப்புகள் வரக்கூடும்.
