துலாம் குரு பெயர்ச்சி ராசி பலன் 2023!

ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள குரு பெயர்ச்சியில் துலாம் ராசிக்கு7 ஆம் இடத்தில் குரு பகவான் பிரவேசிக்கவுள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு 7 ஆம் இடத்திற்கு வரவுள்ள குருபகவானால் சுபச் செய்திகள் உங்களைத் தேடிவரும்.

வீட்டில் சுப காரியங்கள் நடக்கும்; குழந்தை பாக்கியத்துக்கு எதிர்பார்த்து இருப்போருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கப் பெறும். நிலம், வீடு போன்றவை சார்ந்த முதலீடுகளைச் செய்வீர்கள். இதுவரை உடை வாங்குதல், குடும்பத்துடன் வெளி இடங்களுக்குச் செல்தல் என உங்களுக்கான செலவுகள் எதுவும் செய்யாமல் இருந்தநிலை மாறும்.

தைரியத்துடன் முன்னோக்கிச் செல்வீர்கள். உறவினர்களால் குடும்பத்தில் ஏற்படுவதை கண்கூடாக உணர்ந்து அவர்களை விட்டு விலகுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்கள் செய்யாமல் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

துலாம் ராசிக்காரகளைப் பொறுத்தவரை ஜென்மத்தில் கேதுவும், 7 ஆம் இடத்தில் ராகுவும் இருப்பதால் கோளறு பதிகத்தினைப் படித்துவருதல் வேண்டும்.

உடல் ஆரோக்கியம்ரீதியாக அடிவயிறு, கழிவுப் பாதைகள், நகங்கள் என பல உடல் உறுப்புகளில் பிரச்சினைகள் ஏற்படும். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை மேன்மை நிறைந்து இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பின் சந்தோஷம் தரும் விஷயங்கள் நடக்கும்.

வேலைவாய்ப்பு மற்றும் தொழில் ரீதியாக உங்களின் கனவும், ஆசையும் நிறைவேறும் மாதமாக இருக்கும். ஆகஸ்ட் மாதத்திற்குப் பின் வெளியூர், வெளிநாடு சென்று படிக்கும் அமைப்புகள் இருக்கும்.

நரசிம்மர் – காயத்ரி வழிபாடு செய்து வருதல் வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews