துலாம் பிப்ரவரி மாத ராசி பலன் 2023!

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை மந்தநிலையில் இருந்து வந்தீர்கள், நேர்மறையான விஷயங்கள் நடக்கப் பெறும். மன உற்சாகம் அதிகரிக்கும். உங்கள் சிந்தனைகளுக்கு ஆதரவு கிடைக்கும் மாதமாக இருக்கும். வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே பெரிய அளவில் மன ஒற்றுமை இல்லாமல் வாழ்க்கையினை வாழ்ந்து வருகிறீர்கள்.

குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை கண்டும் காணாமல் செல்வது நல்லது. கேது- ராகு 1 மற்றும் 7 ஆம் இடங்களில் உள்ளது. 8 ஆம் இடத்தில் செவ்வாய் பகவான் உள்ளார். குரு பார்வை இல்லை என்பதால் திருமண காரியங்கள் தள்ளிப் போகும்.

மாணவர்களைப் பொறுத்தவரை கல்விரீதியாக தெளிவான சிந்தனையுடன் செயல்படுவார்கள். கவனச் சிதறல்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கொஞ்சம் கூடுதல் கவனமும் அவசியம்.

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை குடும்ப உறுப்பினர்களால் வேலைப் பளு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம்ரீதியாக உடல் காயங்கள் ஏற்படும், வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.

மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வருவீர்கள். முன்னேறுவதற்கும், வாய்ப்புகள் அமைவதற்குமான காலமாக இருக்கும். நட்புகள்- உறவினர்களால் பிரச்சினைகள் ஏற்படும். கணவன் வீட்டார் பணரீதியான பிரச்சினைகளைச் செய்வர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews