துலாம் டிசம்பர் மாத ராசி பலன் 2022!

1 ஆம் மற்றும் 7 ஆம் இடத்தில் ராகு பகவான்- கேது பகவான் உள்ளனர். 6 ஆம் இடத்தில் குரு பகவான், 4 ஆம் இடத்தில் சனி பகவான், 8 ஆம் இடத்தில் செவ்வாய் என கோள்களின் இட அமைவு உள்ளது. சூர்யன்-சுக்கிரன்-புதன் என கோள்கள் இணைந்து 5 ஆம் இடத்தில் காணப்படும்.

டிசம்பர் மாதம் வழக்கம்போல் துலாம் இராசி அன்பர்களுக்கு மிகவும் சுமாரான மாதமாகவே இருக்கும். வேலைவாய்ப்புரீதியாக பெரிதளவில் மாற்றங்கள் எதுவும் இருக்காது. வேலை மாற்றம், பதவி உயர்வு ரீதியாக எந்தவொரு முடிவும் சாதகமானதாக இருக்காது.

பிரச்சினைகளைத் தவிர்க்க துணிச்சலோடு ஒரு முடிவினை எடுப்பீர்கள். பல நாட்கள் வாங்க நினைத்து இருந்த பொருட்களை வாங்குவீர்கள். திருமண காரியங்களைப் பொறுத்தவரை வரன்கள் தள்ளிப் போகும். கணவன்- மனைவி இடையேயான உறவில் பிரச்சினைகள் ஏற்படும்.

வாழ்க்கையில் மன வெறுமை அதிகரித்துக் காணப்படும். எதிர்பார்ப்புகள் வழக்கம்போல் ஏமாற்றத்தினைக் கொடுக்கும். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை தனிமையில் இருப்பதுபோல் உணர்வீர்கள். உணர்வுரீதியான பிரச்சினைகள் மன அழுத்தத்தினை ஏற்படுத்தும்.

மாணவர்களைப் பொறுத்தவரை குழப்பங்கள் நிறைந்து காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை ஆரோக்கியம் குறைந்து காணப்படுவீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.