துலாம் அதிசார கும்ப சனி பெயர்ச்சி பலன்கள் 2023!

உலகமே எதிர்த்தாலும் நீதி நேர்மை தர்மம் நியாயத்தை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து வரும் துலாம் ராசி அன்பர்களே! உங்களுக்கு இந்த வருடம் ஜென்மத்தில் கேது ஏழாம் இடத்தில் ராகு ஐந்தாம் இடத்தில் சனி என்ற நிலையில் இருக்கிறது துவங்குகிறது.

கடந்த வருடம் முழுவதும் உங்களுக்கு கோச்சார ஜென்ம கேதுவால் சிறு சிறு உடல் பாதை மற்றும் எதிலும் பிடிப்பில்லாத விரக்தி மற்றும் பொறுப்புள்ள வாழ்க்கை என்று இருந்திருக்கும். சனி பெயர்ச்சியும் குரு பெயர்ச்சியும் உங்களுக்கு இந்த விரக்தி மற்றும் வெறுப்புள்ள வாழ்க்கையை மாற்றி விடும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்து வந்த அர்த்த அஷ்டமச்சனியால் பல்வேறு விதமான துயரங்களை அலைச்சல்களை அனுபவித்து இருப்பீர்கள். உடனடியாக எந்த வேலையும் நடைபெறாமல் இருந்திருக்கும். இந்த விரக்தி உள்ள வாழ்க்கை இனி மாறிவிடும்.

இந்த வருடம் முழுவதும் நீங்கள் தினமும் வீட்டில் விநாயகர் அகவல் ஒரு முறை ஜெபித்து அல்லது பாடி வாருங்கள். ஒவ்வொரு சங்கடகர சதுர்த்தி அன்றும் உங்கள் தெருவில் உள்ள விநாயகர் கோயிலில் நடைபெறும் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். அங்கே உங்களாலான உடல் உழைப்பு தாருங்கள். கோயில் யானையை பார்த்தால் உணவு தானம் செய்து வாருங்கள். இதன் மூலமாக ஜென்மக் கேதுவால் வரக்கூடிய விரக்தி மனப்பான்மை சீக்கிரமாக மாறிவிடும்.

இந்த வருடம் முழுவதும் நீங்கள் சேமிக்க ஆரம்பிக்கலாம். இந்த வருடம் முழுவதும் சிக்கனமாக இருக்க பழகவும். இதுவரை இருந்து வந்த உடல் பாதைகள் முழுமையாக விலகிவிடும். ஆரோக்கியம் பெருகும். தினமும் இரண்டு கிலோமீட்டர் நடக்கும் வழக்கத்தை உண்டாக்கவும்.

சிவராஜ யோக ஜோதிடர்
வீரமுனி சுவாமிகள்
+919629439499
ராஜபாளையம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.