துலாம் ஆவணி மாத ராசி பலன் 2022!

குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த சங்கடங்கள் சரியாகும் மாதமாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். தொட்டது துலங்கும் காலகட்டமாக இருக்கும், தொழில் ரீதியாக லாபங்கள் ஏற்படும்.

இதுவரை இருந்த பணத் தட்டுப்பாடுகள் நீங்கும் மாதமாக இருக்கும். உத்தியோகம் ரீதியாக அனுகூலங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். மேலும் தொழில் அபிவிருத்தி செய்ய நினைப்போரும், புதிதாக தொழில் துவங்க இருக்கும் மாதமாகவும் இருக்கும்.

உத்தியோகத்தில் இருந்த சிக்கல்கள் தீர தீர மன பாரங்கள் சரியாகும். கணவன் – மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். ராகு கேது பெயர்ச்சிக்குப் பின் இது நடக்கவில்லை அது நடக்கவில்லை என்று நீங்கள் வருத்தப்பட்டதற்கு முடிவு கிடைக்கும் காலமாக இருக்கும்.

கொடுத்த வாக்கினைக் காப்பாற்றுவதற்கான உன்னதமான சூழ்நிலைகள் ஏற்படும். குழந்தைகள் படிப்பு ரீதியாக மேம்பட்டுக் காணப்படுவார்கள். சுப விரயங்கள் மன மகிழ்ச்சியினைக் கொடுக்கும்.

பல ஆண்டுகளாக நீங்கள் வாங்க நினைத்திருந்த ஆடை, ஆபரணங்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பின் நன்மைகள் ஒன்றன் பின் ஒன்றாக ஏற்படும். உங்கள் முன்னேற்றம் பிறரால் பேசப்படும் அளவு ஏற்படும்.

உடல் ஆரோக்கியம் மேம்பட்டுக் காணப்படுவீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews