Connect with us

துலாம் ஆடி மாதம் ராசி பலன்கள் 2018!

Rasipalan

துலாம் ஆடி மாதம் ராசி பலன்கள் 2018!

அன்புள்ள துலாம் ராசிக்காரர்களே, இந்த ஆடி மாதம் பணப்புழக்கம் அதிகரிக்கின்ற மாதமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பதினோராம் இடத்தில் இருப்பதால்  எதிர்பாராத வகையில் தனவரவு உண்டாகும். ஆகஸ்ட் 2-ம் தேதி கன்னி ராசியில் சஞ்சரிக்கும்போது நற்பலன்களைக் கொடுப்பார். குரு பகவான் வக்ர நிவர்த்தியாகி உங்கள் ராசியில் இருப்பதால் செய்கின்ற முயற்சிகளில் இடையூறுகள், தாமதம் ஏற்படக்கூடும்.

உங்கள் ராசிக்கு சூரியன், புதன், ராகு 10-ம் இடத்தில் இணைந்து இருப்பதால் பணிபுரியும் இடத்தில் மாற்றங்கள் நிகழக்கூடும். உங்கள் ராசிக்கு பகை கிரகமான குரு வக்ர நிவர்த்தியாகி இருப்பதால் குடும்பத்தில் இருப்பவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படுத்துவார். ஒரு சிலருக்கு இடமாற்றத்தை கொடுப்பார். ஆனால் அவரது பார்வை விசேஷமாக இருப்பதால் இல்லத்தில் சுப விசேஷ பேச்சு வார்த்தைகள் நடைபெறக்கூடும்.

தனாதிபதி செவ்வாய் வக்ரமாக இருப்பதால் செலவுகள் அதிகரிக்கும். பணவரவை காட்டிலும் செலவுகள் அடுத்தடுத்து இருந்து கொண்டே இருக்கக்கூடும். திட்டமிட்டு செய்யும் காரியங்கள் எதுவும் சரியாக நடைபெறாது. நினைப்பது வேறு நடப்பது வேறு என்று இருக்கக்கூடும்.

சுகஸ்தானத்தில் வக்ர செவ்வாய் கேதுவுடன் இணைந்து இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்ளுங்கள். சனி பகவான் 3-ம் இடத்தில்  வக்ர இயக்கத்தில் இருப்பதால் செயலில் வெற்றி, பொருளாதார வளர்ச்சி, தொழில் விருத்தி தந்துக் கொண்டு இருப்பார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top