Connect with us

விஜய்சேதுபதி ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய ‘துக்ளக் தர்பார்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

Entertainment

விஜய்சேதுபதி ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய ‘துக்ளக் தர்பார்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!


0c4676f9c6278223322c7b7b5860954f-1

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘துக்ளக் தர்பார்’ என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு சன் டிவியின் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த அறிவிப்பின்படி சரியாக இன்று மாலை 5 மணிக்கு சன் டிவியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த அட்டகாசமான போஸ்டரை விஜய்சேதுபதி ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

ஒரு டேபிள் முன் அமைதியாக உட்கார்ந்திருக்கும் வகையிலும் அவருடைய பிம்பம் டேபிளில் உள்ள கண்ணாடியில் சிரித்தபடி இருக்கும் வகையிலும் இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. அருமையான கற்பனையுடன் கூடிய இந்த டிசைன் விஜய்சேதுபதி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அதிதிராவ் ஹைத்ரி நடித்து வரும் இந்த படத்தில் பார்த்திபன், மஞ்சிமா மோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். டெல்லிபிரசாத் தீனதயாள் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top