Connect with us

மூன்று மணி நேர உரை; “தமிழக பட்ஜெட் 2021- 2022”!!

News

மூன்று மணி நேர உரை; “தமிழக பட்ஜெட் 2021- 2022”!!

e531b3e37f89322f9a3aa2fbad9c0349

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. நம் தமிழகத்தின் முதல்வராக தற்போது உள்ளார் முகஸ்டாலின் மேலும் அவர் தற்போது தமிழகத்தில் சிறந்த ஆட்சியை செய்து வருவதாகவும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறார். இதனால் அவரின் ஆட்சி மீது பலருக்கும் நம்பிக்கை உருவாகியுள்ளது என்றே கூறலாம். அவருடன் சேர்த்து மொத்தமாக 34 அமைச்சர்கள் உள்ளனர். அவர்கள் பலரும் அந்த துறையில் சிறந்தவர்களாக காணப்படுகின்றன.0c9a4e57a578cc0fb8f4528639a0805f-2

இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பாக தமிழகத்தின் பட்ஜெட் பற்றி அறிவிப்புகள் வெளியாகின. அதுவும் தற்போதைய உள்ள திமுக ஆட்சியில் முதலாவது பட்ஜெட் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த வழியில் தமிழக பட்ஜெட் 2021-2022 படி பல திட்டங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி நிலுவை வரியை வசூலிக்க சமாதான் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மதிப்பு கூட்டு வரி உள்ளிட்ட நிலுவையிலுள்ள 28,000 கோடி ரூபாய் வசூலிக்க இந்த சமாதான் திட்டம் உருவாக்கப்பட்டது.

மேலும் எளிய மற்றும் அரசுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் சமாதான் திட்டம் இருக்குமென்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் நிதி பற்றாக்குறை 4.33 % கட்டுப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். தமிழ்நாடு அரசின் நிதிப்பற்றாக்குறை ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் இந்த 4.33%த்திற்குள் கட்டுப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வருவாய் இழப்புக்கு தளர்வான வரி நிர்வாகமே காரணம் என்றும் கடந்த பத்தாண்டுகளில் நிலவிய வருமான வரி நிர்வாகம் வருவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று என்றும் கூறப்படுகிறது. மேலும் 1950 ஆண்டு வரை வில்லங்கசான்று பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் 1975 முதல் வில்லங்க சான்று இணையத்தில் பார்க்கும் வசதியை 1950 ஆண்டு வரை வில்லங்க சான்று பார்க்க விரிவுபடுத்த பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மூன்று மணி நேரமாக இந்த பட்ஜெட் உரையாற்றினார் தற்போதைய பழனிவேல் தியாகராஜன் என்ற நிதியமைச்சர். மேலும் அரசு ஊழியர்களின் பிரசவகாலம் 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top