வெளிநாடுகளில் இருந்து பெங்களூரு வந்த 3 பேருக்கு கொரோனா: விமானங்களை நிறுத்துவது தான் ஒரே வழை தொற்று உறுதி!

கடந்த சில நாட்களாக இந்தியாவில் படிப்படியாக கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு திரும்புபவர்களால் தான் கொரோனா வைரஸ் பரவுகிறது என்ற கருத்து நிலவி வருகிறது.

கடந்த 3 நாட்களில் வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த 39 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பதாகவும் அவர்களுக்கு உருமாறிய கொரோனா பரவியதா என்ற ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இன்று வெளிநாடுகளில் பெங்களூரில் வாழ்ந்த 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு எந்த வகையான கொரோனா வைரஸ் பரவி உள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பியவர்களால் கொரோனா வைரஸை பரவுவதை தடுக்க உடனடியாக விமானங்களை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.