Connect with us

மூன்று செயற்கை கோள்கள்-இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது!!

satelite

செய்திகள்

மூன்று செயற்கை கோள்கள்-இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது!!

நம் இந்தியா தற்போது சாதனைகளை வரிசையாக செய்து கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக விண்ணில் ஆய்வு செய்யும் செயற்கைக்கோள்கள் வரிசையாக நம் இந்தியாவிலிருந்து ஏவப்படுகின்றன.

அந்த வகையில் இன்றைய தினம் மூன்று செயற்கைக்கோள்கள் ஏவப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி டிஎஸ்இஓ, நியூசர் உள்பட மொத்தம் மூன்று  செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி 53 ரக ராக்கெட் மூலம் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு பிஎஸ்எல்விசி 53 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

சுமார் 365 கிலோ எடையை கொண்ட சிஎஸ்இஓ செயற்கைக் கோள்கள்  பூமியை துல்லியமாக புகைப்படம் எடுக்கும் திறன் உடையது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 155 கிலோ எடை கொண்ட நியூசர் செயற்கைக்கோள்  சிந்தடிக் ஆபரேஷன் ரேடார் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது என்றும் தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top