Connect with us

281 சவரன் நகை கொள்ளையடித்தவர்களை பிடிக்க மூன்று தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை!!

gold

தமிழகம்

281 சவரன் நகை கொள்ளையடித்தவர்களை பிடிக்க மூன்று தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை!!

நேற்றைய தினம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் அசம்பாவீதம் ஒன்று நடைபெற்றது. ஏனென்றால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட நகைக்கடை ஒன்றில் சுமார் 281 சவரன் தங்க நகைகளை கொள்ளையர்கள் திருடி சென்றனர்.

மேலும் அவர்கள் அங்கிருந்து சிசிடிவி கேமராக்களை அடித்து உடைத்து இருந்ததாகவும் தகவல் கிடைத்தது. அதோடு மட்டுமில்லாமல் சுற்றிலும் இருந்த சிசிடிவி கேமராக்களின் வயர் கனெக்சன்களை துண்டித்து விட்டு தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில் தற்போது இவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி புக்கிரவாரியில் நகைக்கடை ஒன்றில் சுமார் 200 சவரன் கொள்ளை அடித்தவர்களை பிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டை நடைபெற்று கொண்டு வருகிறது.

டிஎஸ்பி புகழேந்தி தலைமையில் மூன்று தனிப்படைகளை அமைத்து கள்ளக்குறிச்சி எஸ்பி பகலவன் உத்தரவிட்டுள்ளார். இதனால் விரைவில் அந்த திருடர்கள் பிடிபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top